சமுதாய அவலங்கள்
அறிமுக கவிஞனடா
அரிதாரம் பூசுமடா
தன் சாயம் வெளுக்கும் முன்னே
பஞ்சாயம் வைக்குமடா
செஞ்சோற்றுக் கடனென
வெஞ்சாமரம் வீசுமடா
வஞ்சத்தில் வீழ்ந்தாலும்
பஞ்சத்துக்கு பிளைக்குமடா
தஞ்சம் வந்த பொன் வாத்தை
தாரைவார்த்துக் கொடுக்குமடா
சமுகத்தின் சீரழிவை
சாதகமாய் ஆக்குமடா
தன் மகிழ்வை விற்று
பிறரை மகிழச் செய்து
புகழுக்காக ஏங்கும்
குறை சாதிக் கூட்டமடா
சாதி இப்போ சமூகமாச்சு
வீதியுந்தான் நாறிப் போச்சு
மாறிவரும் உலகமென்று
மாறுதலைத் தேடுதடா
மனித மனம் வேதனையில் வாடுதடா !!