நாம் எங்கே போகிறோம்

நாம் எங்கே போகிறோம்
அன்போடு வாழ்ந்த அன்னை தெரசா
வாழ்ந்த நாடு எங்கே !
பண்போடு வாழ்ந்த பாரதி
வாழ்ந்த நாடு எங்கே!
எங்கே நாம் போகிறோம் ??
ஏறு பூட்டி சோறுபோட்ட கால்கள் எங்கே?
ஏமாந்து நிலத்தை விற்ற ஆட்கள் இங்கே !
தொழிற்சாலை கட்ட தொல்லாயிரம் சதுரடி
விவசாய செய்ய நிலமில்லை ,அதனால்
உயிரோடும் நானில்லை என்னை
புதைக்க கிடைக்குமா ஆறு அடி!
தமிழ் தான் என் மூலாதாரம்
தமிழில் பேசினால் தமிழகத்தில் அபதாரம்!
மொழி வளர்த்த முன்னோர்களே
மீண்டும் முகம் காட்ட தமிழகம் வந்தால்
முதலிடம் உங்களுக்கு
ஆங்கிலம் பேச தெரிந்தால்!
எங்கே போகிறது என் தமிழகம்
சங்கம் வளர்த்த மொழி எங்கே!
தமிழை உடலில் அங்கமாய் வளர்த்த தமிழன் எங்கே!
பண்பாட்டை தான் வளர்க்க
பட்டாடை,பருத்தியாடை மேலுடுத்தி
எட்டாத உயரத்தில் பறந்துகிறோம்!
இப்போது மேலைநாட்டு ஆடைஎன
ஆபாசமாய் திரிகிறோம்!
எங்கே போகிறோம்!
பலதனியம் பயிறு செய்து
பசியாரிய காலமது!
பாஸ்ட் பூட் என பறபறக்கும்
அலங்கோலமிது !
எங்கே போகிறோம்! வாயில் சோறுபோட
விவசாயிக்கு நிலம் இல்லை, செவ்வாயில்
இடம் வாங்க போட்டி போடுகிறோம்!
எங்கே போகிறோம்! எழில் தமிழை மறந்து விட்டு
அந்நிய மோகத்தில் அழிந்து போகிறோம் !
எங்கே போகிறோம்!நவநாகரீகம் என்று
அநாகரீக ஆடையில் அலைந்து கொண்டிருக்கிறோம்!
எங்கே போகிறோம்! எமனுக்கு வேலை இல்லை
எம்மக்களை கொள்ள என் மாக்களுக்கு
சொல்ல தேவையில்லை !
சந்தனபாரதி.ப
த/பெ .பரமசிவம்.கு
முதுகலை கணினி பயன்பாடு 2ம் ஆண்டு
jkkm தொழிற் கல்லூரி T.N paalaiyam gobi (post) erode