எனது கவிதைப் புத்தகத்தை புரட்டிப் பார்க்கிறேன் 2

கவிஞன் 1

வறுமைக்கு தோழன் ஆயினும்
வார்த்தைகளில் வள்ளல்
கவிஞன் என்று பேர்
கற்பனை அவனுக்கு தேர் !
--------------------------------------------------------------------------------------------------------

உன் புன்னகை ஒரு கவிதை 2

கண்ணிரண்டில் காதல் பக்கங்கள் விரிய
கன்ன குழிவினில் கவிதை ஒன்று மலர
நீ சிரிக்கும் போது
கலைந்து வந்து காதோர கூந்தலிழை
இதழ் ஓரத்தில் வந்து நன்றி நவிலும்
உன்
புன்னகை ஒரு கவிதை .!
--------------------------------------------------------------------------------------------------------------------
சிந்தும் மாதுளை முத்துக்கள் 3

அவள்
சிரித்தாள்
சிவந்தாள்
சிவந்தால் அந்தி வானம் தோற்கும்
சிரித்தால் சிந்தும் மாதுளை முத்துக்கள்
--------------------------------------------------------------------------------------------------------------------
ஏகாந்தம் 4

ஏகாந்தம்
தனிமையில் அமர்ந்தால் கூடுவதில்லை -அது
தவத்தால் பெறும் வரம் .
--------------------------------------------------------------------------------------------------------------------
வடித்தவன் யார் காமனா ? 5

விழி இரண்ண்டில்
தாமரை
இதழ் இரண்டில்
செம் மாதுளை
எழில் இரண்ண்டில்
இலக்கியம் போற்றும்
கற்பனை
முனிவனும் மதி மயங்கிடும்
உன்னை
வடித்தவன் யார்
காமனா ?
--------------------------------------------------------------------------------------------------------------------

பான் சாய் 6

பான் சாய்
விருட்சங்கள்
எடுத்த
வாமன அவதாரம் !
--------------------------------------------------------------------------------------------------------------------
நினைவுகள் இறபதில்லை 7

விரல்கள் மீட்டுவது நின்ற பின்னும்
வீணையில் நாதம் தொடர்வதுண்டு
மலர்கள் மண்ணில் உதிர்ந்த பின்னும்
மணம வீசுவது உண்டு
நினைவுகள் மறப்பதுண்டு --ஆனால்
இறப்பதில்லை !
--------------------------------------------------------------------------------------------------------------------

நர்சின் ஊசியை போல 8

வார்த்தை ஜாலங்கள் இல்லாமல்
சந்தங்களின் துணை இன்றி
கருத்துக்களை
நறுக்கென்று சொல்லும்
புதுக்கவிதை
இனிய புன்னகையுடன்
சின்ன சினுங்கல் தரும்
நர்சின் ஊசியை போல
--------------------------------------------------------------------------------------------------------------------
தாஜ்மஹால் 9

காதலுக்கு சமாதி கட்டும்
மனிதர் மத்தியில்
காதலிக்கு சமாதி கட்டினான்
ஷாஜகான்
அதனால்தான் சரித்திரம்
அதை
அற்புதம் என்று அழைக்கிறது.
========================================================================
பட்டுப் பூச்சி 10

சிறகெல்லாம் வண்ணம்
அமர்ந்தால் அழகு
பறந்தால் அழகு
பட்டுப் பூச்சி
இறைவன் எழுதிய ஹைக்கூ !
========================================================================
====கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (11-Nov-14, 9:21 am)
பார்வை : 142

மேலே