பிழைகளால் அவள் நினைவுகள்

எப்போதோ நான் செய்த பிழைகள்
இன்று மறக்க முடியா உன் நினைவுகளாகிறது
பேருந்தில் உன்னை முதல் முதலில் சந்தித்தபோது
உன் கண்களை நேருக்கு நேர் நோட்டமிட்டது
என் முதல் பிழை

கூரிய உன் விழிகளின் காந்தபார்வையில்
குறி தவறாமல் தாக்கப்பட்டது இரண்டாவது பிழை

தென்றல் போல என்னை கடந்து
மல்லிகை மனம் வீசிய உன்னை பின்தொடர்ந்தது
எனது முன்றாவது பிழை

உன் நட்பு வேண்டுமென்று பின்தொடர்த்து
உன் பெயரை கேட்டது
நான்காம் பிழை

உன் குரலோ தேன் இனிமையென்றும்
உன் பெயரோ கவிதை என்றும்
ஆங்கிலத்தில் பிதற்றியது ஐந்தாம் பிழை

வெட்கத்தை மறைத்து கோபத்தை வீசிய
உன் செவிதழ்கள் உதிர்த்த வார்த்தைகளை பொருட்படுத்தாமல்
உன் அலைபேசியின் எண்ணை கேட்டது ஆறாம் பிழை

இப்படி பல பிழைகள் நான் செய்யமளிருந்திருந்தால்
நீ என் காதலி ஆகாமல் இருந்திருந்தால்
எல்லாமாய் என்னுள் கலக்காமல் இருந்திருந்தால்
காரணம் சொல்லாமல் நம் காதலை திடீர் என நீ முறிக்காமல் இருந்திருந்தால்
மறக்க முடியாத உன் நினைவுகள் என்னை தீண்டாமலே இருந்திருக்கும்

என்ன செய்வது பிழைகள் மனித இயல்பு.......
உந்தன் நினைவுகளும் நீயும் என்றும் எந்தன் இயல்பு.

எழுதியவர் : வினோத் (11-Nov-14, 6:32 pm)
சேர்த்தது : வினோத் ராஜாராமன்
பார்வை : 57

மேலே