காதலித்து பார்
காதல் திசுக்களின் புரட்சி,
ஹார்மோன்கள் செய்யும் வேலை,
வயதில் ஏற்படும் கோளறு என்று
சொன்னார்கள் ..-இல்லை
உண்மையாய் காதலித்து பார்,
முதல்முறை அவளை பார்த்ததும்
நேற்று பிறந்தவன் போல் உணருவாய்,
ஒருநாள் அவளோடு பழகியதும்
அவள்தான் உன் உலகம் என்று சொல்வாய்..
வானம் உன் கை அருகே
இருபது போலவும்..
நிலவை நீ அடிகடி சந்திப்பதை
போலவும்அவளை
பார்க்கும் போதெல்லாம்
சொல்லி கொண்டிருப்பாய்..
எந்நேரமும் கண்ணாடியில்
உன் முகத்தை பார்த்து கொண்டிருப்பாய்,
அவள் முன்னாடி நீ நல்லவன் போல்
நடித்து கொண்டிருப்பாய்...
ஒருநாள் அவளை பார்க்கவில்லை என்றால்,
உலகமே உறைந்தது போலவும்
ஒரு முறை அவள் முகத்தை பார்த்ததும்
புது உலகம் பிறந்தது போலவும் உணருவாய்..
காதல் எதிரிகளை
நண்பர்களாய் மாற்ற தோன்றும்
நண்பனை கடவுளாய்
பார்க்க தோன்றும்..
எங்கோ பிறந்தவளுக்காக சொந்தகளை
மறக்க வைக்கும்...
ஒருவருக்காக ஒருவர் உயிரையும்
கொடுக்க தோன்றும்...
காதலில் ஜெயித்தவன் அவளோடு வாழ்கிறான்..
காதலில் தோற்றவன் அவன் நினைவுகளோடு
வாழ்ந்து கொண்டிருக்கிறான்...
மணிமாறன்...
தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி
அடையார்
சென்னை 600 028