அவளைப் பற்றி

காற்றே கொஞ்சம்
அவளிடம் தூது செல் !
காதல் நோய்கொண்டு
ஒருவன் தவிப்பதை
உணர்ந்து கொள்ளச்சொல் !

வான் மேகங்களே
விரைந்து செல்லுங்கள் !
அவள் வருகைக்கு
ஏங்கித் தவிக்கும்
நெஞ்சம் இதுவெனச்சொல்!

வெண்ணிற நிலவே
சீக்கிரம் மறைந்துகொள் !
அவளது கருநீலவிழியின்
இமைத்திரைகள் திறக்கும்
நேரம் இது !

பஞ்ச பூதங்களே
கொஞ்சம் வரிசையில்
கைகட்டி நில்லுங்கள்
பிரம்மன் வார்த்தெடுத்த
அந்தஅழகு தேவதையைக் காண !!!!

எழுதியவர் : நா.அன்பரசன்.. (11-Nov-14, 8:45 pm)
சேர்த்தது : anbuarun
பார்வை : 79

மேலே