நீயும் நானும்

ஏக்கம் நீ என்றால்.....
உன் காய்ச்சல் நானாவேன்......
கண்கள் நீ என்றால்.....
உன் கனவுகள் நானாவேன்......
தூக்கம் நீ என்றால்....
உன் தலையணை நானாவேன்....
பூக்கள் நீ என்றால் ....
உன் நிறமும் நானாவேன்......
பறவை நீ என்றால்....
உன் சிறகுகள் நானாவேன்....
குயிலும் நீ என்றால்....
உன் குரலும் நானாவேன்......
புத்தகம் நீ என்றால்....
உன் எழுத்தும் நானாவேன்....
இதழ்கள் நீ என்றால்....
உன் புன்னகை நானாவேன்......
கன்னம் நீ என்றால்...
உன் முத்தம் நானாவேன்
கவிதை நீ என்றால்....
உன் சொல்லும் நானாவேன்......