உன் கண்களின் வார்த்தைகள்

என் கவிதைகளே என்
கண்களின் வார்த்தையானால்
உன்னிடம் , காதல் சொல்ல
சுலபமாய் இருந்திருக்கும்

உன் கண்களின் வார்த்தைகள்
புரியாது போவதனால்
என்ன செய்வதென தெரியாமல்
என் விழிகள் முழித்திருக்கும்

உனக்காய் தோன்றாமல்
உன் காதலை வெளிக்கொணர
எனக்கு விருப்பம் இல்லை
ஏனெனில் என்னில், நான் இல்லை

எழுதியவர் : ருத்ரன் (12-Nov-14, 5:08 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 105

மேலே