நட்பின் உன்னதம்

என் நெஞ்சத்து வலிகள்
உனக்கும் வலித்திருக்கும்
என் விழிகளின் உப்புநீர்
உனக்கும் கரித்திருக்கும்
இருந்தும் ஏனோ
இன்னமும்
:..
வற்றிபோன விழிகளில்
வற்றாத நீரூற்றாய் உன்
வண்ண நினைவுகள்..
சாய்ந்து போன பயிர் செழிக்க- சிறு
சாரல் சிந்த வாடா...
ஓய்ந்து போன மனம் சிலிர்க்க
ஓரக்கண்ணால் சீண்ட வாடா...
வந்து விடு வந்து விடு வந்துவிடு-என்
வானத்து வெண்ணிலவே வந்துவிடு..