தன்மானம்
மானம் உள்ளவன் மனிதன் மட்டுமே
தன்னைக் காப்பது போல்
தன்மானத்தையும் காக்க வேண்டியவன் மனிதன்
தன்மானம் என்பது மனித வாழ்கையில்
மிகப் பெரும் சொத்து
எதை இழந்தாலும் மனிதன்
தன்மானத்தை இழந்து விட்டால்
அவன் ஒரு நடைப் பிணம் தான்
மனிதம் என்பதன் முதல் அடையாளம் மானம் தான்
தன்மானம் கொண்டவன் தலை நிமிர்ந்து வாழ்வான்
மானம் உள்ள மனிதனுக்கு உலகமே தலை சாய்க்கும்
ஒரு சிறு அவமானம் என்றாலும் தாங்க முடியாதவன்
தன்மானம் மிக்க மனிதன்
தன் மானம் காப்போம் தலைநிமிர்ந்து வாழ்வோம்
தலைநிமிர்ந்து வாழ நம்மிடம் உள்ளது நம் தன்மானம் மட்டுமே
இறைவன் கொடுத்த அருள் கொடை இது
மனிதன் என்ற போர்வைக்குள்
கட்டி காக்கப் படவேண்டிய
மிகப் பெரிய சொத்து தன்மானமே