உஷாரைய்யா உஷாரு

நூதன திருட்டுத்தனம்
கேட்டுக்கங்க... கேட்டுக்கங்க...
நாட்டுலதான் நடக்குதிப்போ
நடக்குறத தெரிஞ்சுகங்க!!!

மின்சார அளவுகள
கொறச்சிதான் கணக்கு சொன்னா
காரணத்த கேட்டுக்கங்க
கணக்க சரி செஞ்சிகங்க!!!

கொறச்ச "பில்லு" வந்ததுன்னு
கொண்டாட்டம் போடாதீங்க
அடுத்த முறை ஏத்தி வெப்பான்
அழுதழுது பொலம்பாதீங்க!!!

அளவு அறுநூறு மேலானா
ரெட்ட வசூலாகுமின்னு
தந்திரங்கள் நடக்குதப்பா
தறிகெட்ட நாட்டுக்குள்ள!!!

கண்கட்டு வித்தையிலே
அப்பப்போ கொள்ளையிது
கண்டுகிட்டா தொல்லையில்லே
காசு பணம் சேதமில்ல !!!

கண்ணெதிரே நடக்கும் திருட்டு
கண்டு தலையில் குட்டுங்கைய்யா
காணாம விட்டுவிட்டா
கண்டபடி நட்டமைய்யா!!!

எழுதியவர் : சொ.சாந்தி (12-Nov-14, 9:23 pm)
பார்வை : 106

மேலே