கண்ணன்

பலருக்கும்
அன்பைப்
பகிர்ந்தவன்
கண்ணன்!
பலமிலா
தவர்க்கும்
பலமவன்
கண்ணன்!

மாயையைக்
காட்டிப்
பிறந்தவன்
கண்ணன்!
வாயினுள்
எல்லாம்
மறைத்தவன்
கண்ணன்!

கந்தையைப்
பெருக்கிக்
காட்டினான்
கண்ணன்!
நிந்தையை
ஒதுக்கி
நீக்கினான்
கண்ணன்!

தூதனாய்
நல்லன
துலக்கினான்
கண்ணன்!
சூதனாய்ப்
பாவமே
விலக்கினான்
கண்ணன்!

ஆவதைக்
கொடுத்து
அழித்தவன்
கண்ணன்!
சேவையைக்
கொடுத்துச்
செயித்தவன்
கண்ணன்!

வாதினைச்
சூதினைக்
கற்றவன்
கண்ணன்!
ஏதிலும்
மயக்கம்
அற்றவன்
கண்ணன்!
===== ++ ======

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (12-Nov-14, 5:27 pm)
பார்வை : 60

மேலே