நெடுஞ்சாலை

வாழ்க்கை..
ஆரவாரமற்ற தங்க நாற்கர
நெடுஞ்சாலை போல அமைதியாய் இருக்கிறது..
இடை இடையே ..
மேலும் கீழுமாய் ஏறி இறங்கி
வழுக்கியபடி நீள்கிறது..!
அங்கங்கே ..
அடிபட்டு முகமுடைந்து
துணியை கிழித்துப் போட்டது
போல் இறந்து கிடக்கும் நாய்கள்..
கனவுகளோடு போனவனின் சடலம்..
பரபரக்கும் முதலுதவி வாகனங்கள்..
வழியெங்கும் சோலைகள்..
பச்சை வயல் வெளிகள்..
வரண்ட கிணறுகள்..நிலங்கள்..
கடினமான பாறைகள்..
இப்படி எத்தனை எத்தனையோ ..
காட்சிகள் உள்ளடக்கி
வாழ்க்கை ...நெடுஞ்சாலையாய்..
இரவும் பகலும் ..!

எழுதியவர் : கருணா (12-Nov-14, 4:41 pm)
Tanglish : nedunjaalai
பார்வை : 120

மேலே