வெள்ளம்

ஆறு வறண்டு
இருந்தாலும்
வளைந்து வளைந்து
போய்க் கொண்டிருக்கிறது..
அங்கங்கே மறைப்புகளை ஏற்படுத்திக் கொண்டே!
ஆனந்த வெள்ளம்
கரை புரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது..
வறண்ட ஆற்றங்கரையோரம் ..
அங்கங்கே ..மறைவுகளிலும்
திறந்த வெளிகளிலும்..
குற்றங்கள் ..
கரை புரட்டி.. திருடி ..
கிடைக்கின்ற இன்பத்தால்
ஆனந்த வெள்ளம்
வறண்டிருக்கும் ஆற்றினிலும்
வருடம் முழுதும் !