கிரீடம் இருக்கு, ப்ரீடம் இல்லை

-
எனக்கு புகழ்ச்சி பிடிக்காது புலவரே...!
-
பரவாயில்லை மன்னா...நான் வந்தஅதற்கு சாமரம்
வீசும் பெண்களையாவது புகழ்ந்து பாடிவிட்டுச்
செல்கிறேன்...!
-
----------------------------------------------
-
பெண் பார்க்க வந்தவங்க ஃபேஸ்புக்ல இருக்காங்கன்னு
எப்படி சொல்றே..?
-
போய் லெட்டர் போடுறோம்னு சொல்லாம, ஸ்டேட்டஸ்
போடுறோம்னு சொன்னாங்களே...!
-
---------------------------------------------------
-
தலைவருக்கு பேரன் மேல பாசம் அதிகம்....!
-
அதுக்காக பேரனன்புமிக்க தலைவர் அவர்களே'னு
சொல்லிட்டு பேச ஆரம்பிக்கணுமா...!
-
----------------------------------------------
-
என்ன...அந்த வக்கீலுக்கு இதுதான் முதல் கேஸா..?
-
ஏன் கேட்கறீங்க?
-
கனம் கோர்ட்டார் அவர்களே...ஒல்லி பிராசிக்யூட்டர்
அவர்களே'னு வாதத்தை ஆரம்பிக்கிறாரே...!
-
----------------------------------------------
-
அந்தப்புரத்தில் நுழைய மன்னருக்கு மகாராணியார்
தடை விதிதுத்துள்ளாராம்...!
-
ஓ,,,அதான் நம் மன்னர் கிரீடர் இருக்கு, ப்ரீடம் இல்லை'னு
பன்ச் டயலாக் பேசிக்கிட்டு திரியறாரா..?
-

நன்றி: ஆனந்த விகடன்

எழுதியவர் : படித்ததில் பிடிப்பு (13-Nov-14, 8:29 am)
பார்வை : 137

சிறந்த நகைச்சுவைகள்

மேலே