உங்களுக்காக ஆசை ஆசையா

என் பக்கத்து வீட்டுக்காரன் புதுசா கக்கூஸ் கட்டிட்டு
ரொம்பத்தான் படுத்தறான்..!
-
என்னய்யா பண்றான்..?
-
உள்ளே போய் உட்கார்ந்துகிட்டு , நம்பிக்கட்டினோம்,
நன்றாக இருக்கிறோம் அப்படின்னு பாடுறான்யா...!
-
-------------------------------------------------

-
மல்யுத்த வீரர் பெண்ணைக் கட்டிக்கிட்டது தப்பாப்

போச்சா..ஏன்?

-

எதற்கெடுத்தாலும் ஒண்டிக்கு ஒண்டி வர்றியான்னு

கேட்கிறா...!

-
------------------------------------------


நில அபகரிப்பு வழக்கு தெரியும்,.. அதென்ன தலைவரை

நிலா அபகரிப்பு வழக்கில் கைது பண்ணிட்டாங்க.?

-

அது வேறொன்றுமில்லை...நிலாவில பத்து ஏக்கர் நிலம்

சொந்தமா இருக்கிறதா சொல்லி அதை எந்த அப்பாவிக்கோ

வித்து தொலைச்சிருக்கார்...!

-
--------------------------------------------------------


என்ன அத்தான்..உங்களுக்காக ஆசை ஆசையா

காபி வைக்கிறேன், நீங்க சுடுநீரை எடுத்து

குடிக்கிறீங்க..?

-
ரெண்டுக்கும் வித்தியாசம் பெரிசா இல்லை..!

-
-------------------------------------------
நன்றி: பாக்யா

எழுதியவர் : கே இனியவன் (13-Nov-14, 8:33 am)
பார்வை : 123

சிறந்த நகைச்சுவைகள்

மேலே