அம்மா கடைக்கு வந்துட்டேன்
பொண்டாட்டி கூட சண்டை...ஆம்பள நான் அழுதுட்டு
அம்மா வீட்டுக்கு போனா நல்லாவா இருக்கும்,
அதான் அம்மா கடைக்கு வந்துட்டேன்..!
-
---------------------------------------------------------------------------
-
குழந்தைகள் நம் தவறுகளை மன்னித்து விடுகிறார்கள்...
நாம்தான் அடித்து விடுகிறோம்...!
-
---------------------------------------------------------------------------
-
அப்போதைக்கு அதிர்ச்சியை தந்தாலும், பின்னாளில்
முதிர்ச்சியைத் துருவதில்...தோல்விகள்
ஜயித்து விடுகின்றன.
-
--------------------------------------------------------------------------
-
சிலரிடம் தங்க நகை வைத்திருக்கிறார்களா என்ற
கேள்விக்கு, ...'வெச்சிருக்கிறோம்' என்று நுட்பமான
பதில்...!
-
#அடமானம்
-
---------------------------------------------------------------------------------
-
போட்டோ ஷாப்பை முதன் முதலில் பயன்படுத்தியது
'சிகிச்சைக்கு முன், சிகிச்சைக்குப்பின் - விளம்பரத்துக்காக
இருக்கும்...!
-
---------------------------------------------------------------------------
--முகநூலில் ரசித்தவை