மந்திரி மாப்பிள்ளை ஏன் வேண்டாம்னு சொல்றீங்க

தரகரே..எனக்கு பாக்குற பொண்ணுக்கு சொந்தமா
வீடு இருக்கணும், பேங்க்ல பணம் இருக்கணும், நிலம்
இருக்கணும்...!
-
அப்ப பொண்ணுக்கு குழந்தையும் இருக்கும்,
பரவாயில்லையா...!
-
---------------------------------------------------
-
போர்க்களத்திலே, அரசர் அடிக்கடி போர் நிறுத்தம்
செய்கிறாரே..ஏன்?
-
விளம்பர இடைவெளியாம்...!
-
------------------------------------------------
-
கபாலி எலும்பு வாங்கிட்டு போகிறானே...ஏன்?
-
இன்னைக்கு அவன் திருடப்போகும் வீட்டில் நாய்
இருக்காம், அதான்...!
-
----------------------------------------------
-
என் கண்ணாடியை வாங்கிப் போட்டுப் பார்த்தீங்களே
எப்படி தெரியுது..?
-
அதே ஆளாகத்தான் தெரிகிறது...!
-
-------------------------------------------
-
என் மனைவி வாங்கிட்டு போன சேலை மாதிரியே
இன்னொன்னு கொடுங்க...!
-
தெரியும் சார்...! வேலைக்காரியைக்கூட மனைவிக்கு
சமமா மரியாதை கொடுப்பவர்னு...!
-
---------------------------------------------------
-
மந்திரி மாப்பிள்ளை ஏன் வேண்டாம்னு சொல்றீங்க?
-
பர்மனென்டா இருக்கணும், டெம்பரரியா இருக்க
கூடாது, அதான்...!
-
---------------------------------------------------
நன்றி: பாக்யா
-_________________
அன்புடன்
அ.இராமநாதன்

எழுதியவர் : படித்ததில் பிடிப்பு (13-Nov-14, 8:46 am)
பார்வை : 157

சிறந்த நகைச்சுவைகள்

மேலே