தாலியக் கழட்டி வச்சிடுறாங்க
அன்னைக்குப் பல பெண்களுக்குத் தாலியக் கழட்டுனா
மனசு உறுத்தும்
-
இன்னைக்குப் பல பெண்கள், தூங்கறப்ப உறுத்துச்சுன்னா
தாலியக் கழட்டி வச்சிடுறாங்க...!
-
------------------------------------
-
அப்ப எங்கேயாவது ரோட்டுல ஆக்சிடென்டை பார்த்தா,
உடனே ஆம்புலன்சுக்கு போன் போட்டான்
-
இப்ப எங்கேயாவது ரோட்டுல ஆக்சிடென்டை பார்த்தா,
உடனே போட்டோ புடிச்சு பேஸ்புக்ல போடுறான்..!
-
----------------------------------
-
அன்றைய தமிழர்கள், வீட்டுல இருக்கிற அப்பா அம்மாவுக்கு
தெரியாம காதலிச்சாங்க...!
-
இன்றைய தமிழர்கள், வீட்டுல இருக்கிற தங்கள் புருஷன்
பொண்டாட்டிக்கு தெரியாம காதலிக்கிறாங்க...!
-
-----------------------------------------
-
புத்தாண்டு பொங்கல்னூ பண்டிகை வந்தா, வாழ்த்து அட்டை
வாங்கி சொந்த பந்தங்களுக்கு அனுப்புவான்
-
இன்னைக்கு பண்டிகை நாள்ல எஸ்.எம்.எஸ் அனுப்பினா
காசு புடிப்பாங்கன்னு, முந்தின நாளே 'Happy Diwali"
சொல்லி முடிச்சிடறான்...!
-
=======================================
>ஆல்தோட்ட பூபதி
நன்றி: குங்குமம்