கொத்தமல்லி பருப்பு உருண்டை

சமையல் குறிப்பு ..
கொத்தமல்லி பருப்பு உருண்டை ..
தேவையான பொருட்கள் :-
ஒரு கட்டு பச்சைக் கொத்தமல்லி
2/3 ஸ்பூன் சமையல் எண்ணெய்
ஒரு கப் உளுந்து பருப்பு
8/10 சிவந்த மிளகாய்
ஒரு எலுமிச்சம்பழ அளவிற்கு புளி
தேவைக்கேற்ப உப்பு
தேவைக்கேற்ப பெருங்காயம்
செய்முறை :-
பச்சைக் கொத்தமல்லியை கழுவி, உலர்ந்த துணியில் வைத்து ஈரப்பசை அகற்றி, சிறிதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். கடாயில் சமையல் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து உளுந்து பருப்பு, சிவந்த மிளகாய், பெருங்காயம் இட்டு வதக்கவும். பிறகு அத்துடன் நறுக்கி வைத்த கொத்தமல்லியை இட்டு வதக்கவும். இவை அனைத்தையும் மிக்சியில் இட்டு அறைக்கும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாக புளியும் உப்பும் சேர்த்து அறைத்தெடுத்து சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து ஒரு பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி பாட்டிலில் இட்டு, ப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளவும்.
என்னடா இது, பிரிட்ஜில் வைத்தால் எப்பொழுது அதை ருசிப்பது என்று கேட்கிறீர்களா ? சோறு சமைத்து, தயிர் சாதம் சாப்பிடும் பொழுது ருசித்துப்பாருக்கள். ஒரு பிடி சோறு அதிகம் சாப்பிட்டு உடம்பு ஊதி விட்டது என்று மட்டும் சொல்லாதீர்கள்.
நன்றி.