நாம் எங்கே போகிறோம்

நாம் எங்கே போகிறோம்
விலைக்கு செல்லும் விளைநிலங்கள்
வியர்வை என்ற வைரத்தை
விதையாக பெற்ற நிலங்கள்
விலைக்கு விற்கப்பட்டு வீணாகின்றன
நாம் எங்கே போகிறோம்
விண்ணையும் மண்ணையும்
மாறி மாறி பார்த்த விவசாயி
விண்ணை மட்டுமே பார்க்கிறான்
மண் கண்ணுக்கு தெரியவில்லை
மண்ணுக்கு பதில் மலையளவு
கட்டிடங்கள் கால் பதித்தது
நாம் எங்கே போகிறோம்
வானம் தூவும் நீர் பூவும்
வருடம் ஒருமுறை என்றாகிவிட்டது
மண்வெட்டி கொண்ட வீரன்
களமின்றி மாய்த்து கொள்கிறான்
மரமும் மண்ணும் மாறி
மாறி தாங்கிய மழைத்துளி
மலையளவு கல்கூடு தாங்குகிறது
நாம் எங்கே போகிறோம்
விவசாயி என்ற வீரன்
விளைநிலம் என்ற போர்களத்தில்
வியர்வையோடு விளையாடினால்தான்
விலைக்கு கிடைக்கும் அரிசி
இல்லையென்றால் எங்கே போவது ...........................
சிந்திப்போம் செயல்படுவோம்




முகவரி :
A.RICHARD EDWIN
Department Of Mechanical
PSNA college of Engg and Technology
kothandaraman nagar
dindigul-624622.

எழுதியவர் : ஆ.ரிச்சர்டு எட்வின் (13-Nov-14, 11:53 am)
சேர்த்தது : richard edwin
Tanglish : naam engae pokirom
பார்வை : 331

மேலே