உன்னை சிந்தித்தால்

உன்னை சிந்தித்தால்...
(எங்கடவுள் காமராசர்)
காட்சிக்கெளிதாக! கருத்துக்கினிதாக!
கல்விக்கண்ணாக! கண்ணியத்துப்பொன்னாக!
கட்சித் தலையாக! கருப்பசாமி சிலையாக!
மண்ணுக்குள் சென்ற பின்னும் எந்திரு (என்திரு) மகராசரே!
உம்மை சிந்தித்தால்,
உடம்பெல்லாம் சிலுக்குதய்யா! கண்ணிரண்டும் கலங்குதய்யா!
உன்னைகாணத் துடிக்குதய்யா! உளம் மாற நினைக்குதய்யா!
உன் பதம் வணங்கிட வழியொன்று உள்ளதெனில்,
உரக்கச் சொல்லய்யா உயிா்விடவும் துணிகிறேன்!
-விஜயகுமார்