விஸ்கி உஷ்கி

விஸ்கி உஷ்கி

டேய் என்னடா அங்க போறவன விஸ்கின்னு கூப்பிடற. அவன் பெரிய குடிகாரனா?

ஏண்டா நாம எப்பவுமே குறுக்கு வழிலெ போறவுங்க தானே. மாமாவ மாம்ஸ்சு, பெரியவரேன்னு மரியாதையாச் சொல்லாம பெரிசுன்னு சொல்றோம். ராமகிருஷ்ணன் ராம்கி, பாலகிருஷ்ணன் பால்கி, பாஸ்கரன் பாஸ்கி.

சரி விஸ்கின்னு அவனெ ஏங் கூப்பிட்ட?

அவன் என் நண்பன்டா. அவம் பேரு விஸ்வகிருஷ்ணன். நம்ம குறுக்குவழி வழக்கப்படி விஸ்வகிருஷ்ணனை விஸ்கின்னு கூப்பிடறதுதானே சரியா இருகும். அவன் ரொம்ப ஒழுக்கமானவன்டா. சினிமாக்கூட பாக்கமாட்டான்.

அது சரி. அப்ப எம்பேரும் கிருஷ்ணன். எம் மனைவி பேரு உஷா. உஷாகிருஷ்ணன்ன்னு சொல்லவே எம் மனைவி ஆசப்படறாங்க.

அப்ப அவுங்கள இனிமே உஷ்கின்னு கூப்பிட்டத்தான் சரி இருக்கும்.

நன்றிடா. இதுவரைக்கும் எனக்கு இந்த மாதிரி சிந்தனையே வரலீடா.

எழுதியவர் : மலர் (13-Nov-14, 4:28 pm)
பார்வை : 291

மேலே