என் அன்புக் காதலியே
மழை நேரம்
கீச் கீச் என்ற வண்டுகளின் சத்தம்...
பயந்துபோய் மேகத்திற்குள்
மறைந்து நிற்கும்
மின்மினி நட்சத்திரங்கள்....
வெளியே தலை காட்டாத நிலவு...
அதனால் நீ கொஞ்சம்
வெளியே வா என் அன்புக் காதலியே...
நிலவு காட்டி
குழந்தைக்கு சோறு ஊட்டும்
அன்பு அன்னையர்கள்
ஏங்கி விடாமல் இருப்பதற்கு........