ஒத்தயடி பாதை
ஒத்தயடி பாதை
நித்தம் தினம் காலை
உச்சி வெயிலிலும் கூட
உன் ஒத்த பார்வைக்காக
நான் காத்திருக்கேன்
ஒத்த மரத்து கீழே
வாடி புள்ள வாடி
உன் ஆசையத்தான் தாடி
கண்ணுக்குள்ள காதல
வெச்சு தள்ளி நடப்பதேன்டி
உள்ளுக்குள்ள உந்தன் எண்ணம்
எனக்குள்ள எந்நாளுமே அது மின்னும்
நீ கொஞ்சி பேசினாலே என்
ஜென்மம் நூறு வேண்டும்
நெஞ்சினிலே பாரம்
நீ புன்னகித்தல் போதும்
என் கண்ணில் உள்ள ஈரமும்
காணாமலே போகும்