தாய்ப்பாசம் 0054
தேவலோகமும் சொல்கிறது
இதிகாசமும் சொல்லிக்கொடுக்கிறது
தாய் தான் தெய்வத்தை விட
மேலானவளென்று
என் பாசமும் பரிதவிக்கின்றது
உன் நேசம் காட்டிக்கொடுக்கின்றது
பவித்திரமான உன் அன்புக்கு
கடன் காரன் நானென்று!!!
உன் நெஞ்சில்
என் பிஞ்சிப்பாதங்கள்
பஞ்சி போல் தைத்ததா தாயே !
எனக்கு உன் பாசம்
நெஞ்சமெல்லாம் அமிர்தமாய்
சுரக்கின்றது அன்னையே
எனக்காக எத்தனை
எண்ணங்களை எறிந்திருப்பாய்
உன் இளமையை
எனக்காக செலவழித்து விட்டாயே
உன் நரை முடியும்
உற்றுப்பார்க்கும் பவ்விய பார்வையும்
கட்டித் தழுவலில் நீர் சொட்டும்
கண்ணீர்த் துளியின் ஈரப்படர்வும்
காட்டிக்கொடுக்கிறது
உன் பாசத்தின் ஆழத்தை...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
