அப்போதும் எப்போதும் 0055

நிலைக்கண்ணாடி முன் நான் நல்ல வடிவா இருக்கிறேன்
யாரும் என்னைப்பார்த்து விமர்சிக்கும் போது
நான் நிலைக்கண்ணாடி
முன்னின்று புலம்புகின்றேன்

மாப்பிள்ளை பார்ப்பதற்கு
புகைப்படம் அனுப்பினால் புன்னகைக்கும் பதில் !
நேரடியாக பார்த்து விட்டுப்போகும் போது
புதைத்து விட்டுப்போவார்கள் உயிரோடு !

என் தோழிகளுக்கு கல்யாணமாகி
இரண்டு,மூன்று குழந்தைகள் !!
எனக்கு வரமே! இன்னும் கிடைக்கவில்லை
என் அம்மாவும் அப்பாவும்
அப்போதும்,எப்போதும் என்னை
புகழ்வதை விட்டு விட வில்லை!!!!!

எழுதியவர் : மட்டுநகர் கமல்தாஸ் (14-Nov-14, 2:03 am)
Tanglish : appothum eppothum
பார்வை : 64

மேலே