நம் பிரிவு ஒரு பிரிவல்ல

நம் பிரிவு ஒரு பிரிவல்ல ....!!!

இதயமானவளே ...
உன்னை நினைக்கும் போது ...
இன்பத்தை ஊற்றாய் தருகிறாய் ...
இன்ப கடலில் நீந்தவைகிறாய்....
நம் பிரிவு ஒரு பிரிவல்ல ....!!!

உடலால் பிரிந்திருக்கிறோம்...
நினைவால் இணைந்திருக்கிறோம் ...
உயிராய் இணைந்திருந்தபோது ...
நீ தந்த இன்பத்தை காட்டிலும் ...
பிரிவின் போது வரும் இன்பம் ...
மதுவை காட்டிலும் இன்பம் தரும் ..
மாதுவடி நீ .....!!!

திருக்குறள் : 1121
+
நினைந்தவர்புலம்பல்.
+
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 121

எழுதியவர் : கே இனியவன் (14-Nov-14, 8:30 am)
பார்வை : 161

மேலே