வகுப்பறை

பள்ளிகூட வகுப்பறை
மனிதனின் இரண்டாம் கருவறை
உடல் பெற்றது
உயிர் பெற்றது
உள்ளம் பெற்றது
உணர்வு பெற்றது - முதல் கருவறை
அன்பு பெற்றது
அறிவு பெற்றது
அடக்கம் பெற்றது
அகிலம் பெற்றது - இரண்டாம் கருவறை
நாம் மீண்டும் அமர
முடியாத சிம்மாசனம்
இந்த இரண்டு கருவறைகளுமே
இரண்டாம் கருவறை
இயன்றால் முடியும்
முதல் கருவறை
எப்போதுமே முடியாது


முகவரி:
A.RICHARD EDWIN
Department Of Mechanical
PSNA College of Engg and Technology
kothandaraman nagar
dindigul-624622.

எழுதியவர் : ஆ.ரிச்சர்டு எட்வின் (14-Nov-14, 11:55 am)
Tanglish : vagupparai
பார்வை : 136

மேலே