இப்போதைக்கு சில வேண்டும்
சோக நினைவுகளை எரிப்பதற்கு
ஒரு இடம் வேண்டும்..
பேராசைக் கனவுகளை புதைப்பதற்கு
கொஞ்சம் மண் வேண்டும்..
பெருகிடும் ஆசைகளை அழிப்பதற்கு
நிறைய தீ வேண்டும் ..
புரட்டிடும் அச்சங்கள் அறுப்பதற்கு
சிறு கத்தி வேண்டும்..
வீண் விரக்தியினை விரட்டுதற்கு
ஒரு வழி வேண்டும்!
இந்த நிமிடத்தில் வாழ்வதற்கு
தெளிந்த மனம் வேண்டும்!
பொறாமை நெஞ்சில் அகலுதற்க்கு
பரந்த உள்ளம்தான் வேண்டும்!
கிடைத்த வாழ்வை ரசிப்பதற்கு
போதுமென்ற குணம் வேண்டும்!
பிறவியின் பயனை பெறுவதற்கு
பிறர்க்கு உதவிடும் வாழ்க்கை முறை
தான் வேண்டும் !