என்னை பிடிக்குமா

ஒரு வழி காதலால்
தினம் வலி கொள்கிறேன்
உன் விழி பேசினால்
ஊமையாய் ஆகிறேன்

உன்னிடம் சொல்லிட
தினம் தினம் முயல்கிறேன்
ஒத்திகை பார்த்தும்
ஏனோ தோற்கிறேன்

சொன்னால் வாழுமோ
சொல்லாமல் சாகுமோ
நான் கொண்ட காதல்
மனதோடு மழை சாரல்

கவிதை பிடிக்குமே
இயற்க்கை பிடிக்குமே
நிலவையும் பிடிக்குமே
மலரையும் பிடிக்குமே

உனக்கு பிடித்தவை
எனக்கும் பிடிக்குமே
என்பதால் கேட்கிறேன்
என்னை பிடிக்குமா....

எழுதியவர் : ருத்ரன் (14-Nov-14, 3:20 pm)
பார்வை : 307

மேலே