என் கண்ணன் வந்தான் - யாழ்மொழி

மலர் தூவி
தினம் பூசித்தேன்
மனமி றங்கி - என்
கண்ணன் வந்தான்

மாயனின் அழகில் - எனை
முற்றும் மறந்தேன்
மனைவி
ராதையை ஏமாற்றி
கண்ணன் வந்தான்

காதல னவன் நினைவில்
கண்மூடினேன்
வண்ணக் கனவுகளோடு - மாய
கண்ணன் வந்தான்

கண்டதும் மெய்மறந்து
பிதற்றலானேன் - என்
வாய்மொழி அடைத்திட
கண்ணன் வந்தான்

அந்த
மயக்கத்தில் மங்கை நான்
தள்ளாடினேன் - தங்க
மார்போ டணைத்திட
கண்ணன் வந்தான்

விடியும் பொழுதெண்ணி
மனம் வாடினேன் - எனை
விலகிடக் கூடாதென்று
கண்ணன் வந்தான்

ராதையின் உரிமையெண்ணி
கலங்கிநின்றேன் - இந்த
பேதையின் கணவனாக
கண்ணன் வந்தான்

கனவும் கற்பனையும் போதுமடி
இனி கண்ணே - நான்
உன்னோடென
கண்ணன் வந்தான்

ராதை என்னடி
ராதை என்றான்
இந்தக் கோதையிடம்
தன்னைத் தந்தான்...!

எழுதியவர் : யாழ்மொழி (14-Nov-14, 5:39 pm)
பார்வை : 457

மேலே