மாசில்லா உலகு

என் பாட்டன் சுவாசித்த,
அப்பழுக்கில்லாத காற்று வேண்டும்...
பூச்சிகொல்லிகள் போடாது விளைவித்த,
உணவுபொருட்கள் வேண்டும்..
கழிவுநீர் கலக்காத குடிநீர் வேண்டும்..
பாலிதீன் இல்லாத நாடு வேண்டும்..
குப்பைகள் இல்லாத வீடு வேண்டும்..
மரங்கள் வளர்ப்போம்...
காற்றை வடிக்கட்டி சுவாசிப்போம் ...
காடுகளை வளர்ப்போம்...
மழை பெறுவோம்...
மழைநீரை சேமிப்போம்...
இயற்கை உரங்களை உபயோகிப்போம்...
நச்சுகளை தவிர்ப்போம்...
நெகிழி பொருட்களை நிராகரிப்போம்...
காகிதப்பைகள் உபயோகிப்போம்...
குப்பைகளை மறுசுழற்சி செய்வோம்...
மாசில்லா உலகை உருவாக்குவோம்...
திருவள்ளுவர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி.
பொன்னூர் மலை- 604 505.
வந்தவாசி.