மனைவியின் கின்னஸ் சாதனை
மனைவியின் கின்னஸ் சாதனை
நீ பெரிய ஆளப்பா. உம் மனைவியோட சாதனை கின்னஸ் பதிவேட்ல எடம் பிடிச்சிருக்குன்னு பேப்பர்ல போட்டிருக்காங்க. நா தலைப்பு செய்தியைப் படிச்சிட்டு நேரா உங்கிட்ட வந்திட்டென் ஒம் வாய்லிருந்து முழுத்தவகவலையும் தெரிஞ்சிக்கலாம்ன்னு.
அந்தக் கதைய ஏப்பா கேக்கற. அவ என் அத்தை பொண்ணுத்தான். சின்ன வயசிலிருந்து எந்த நேரமும் யாரையாவது திட்டிட்டே இருப்பா. கல்யாணம் ஆனாத் திருந்திடுவான்னு நெனச்சோம். அது நடக்கல. சரி பிள்ளைங்க பொறந்தா திருந்துவான்னு எதிர்பார்த்தோம். இப்ப பேரம்பேத்தி எடுக்கற வயசிலயும். அவ திருந்தவே இல்ல. கின்ன்ஸ் நிறுவனத்துக்கு எழுதிப் போட்டேன். அவளும் தன்னோட பேரு செய்தித்தாள்களிலும் டிவியிலயும் வருமேன்னு ஒத்துட்டா.
சரி சரி என்னாச்சுன்னு சொல்லு.
கின்னஸ் நிறுவனத்லெ இருந்து வந்தாங்க. இவ ரெண்டு நாள் தொடர்ந்து திட்டிட்டே இருந்தா. அவுங்களே தாக்குப் பிடிக்கமுடியாம சலிப்படஞ்சு நிறுத்தச் சொல்லிட்டு ”இது உலக மகா சாதனைன்னு பாராட்டி, நிருபர் கூட்டத்தக் கூட்டி சான்றிதழத் தந்துட்டுப் போய்ட்டாங்க” இப்ப ரெண்டு நாளா அமைதியா இருக்கா. எப்ப வெடிப்பாலோ தெரியாது.
அதுக்கென்னப்பா எப்படியோ ஒம் மனைவி கின்னஸ் சாதனை படச்சிட்டாங்க. அது பெரிய விஷயம்ப்பா.