நகைச்சுவை அவனும் அவளும்

அவனும் அவளும் ..


யோகா வகுப்பிலிருந்து வீடு திரும்பி வந்த கணவன் மனைவியை அழைத்து தன் இரு கரங்களும் எடுத்துக் கொண்டு, அவளைப் பார்த்து புன்முறுவலித்தபடியே அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தான். கணவனின் இந்த ஆச்சர்யமூட்டும் செயலைக் கண்டு மனைவி, "என்னங்க இது ? ஒருநாளும் இல்லாமல் இன்று என்னை சுமந்துகொண்டு சிரித்திப் பழகுகிறீர்களே .. உங்கள் யோகா குரு மனைவியை எப்பொழுதாவது பாராட்டவேண்டும் என்று புதிய பாடம் ஏதும் சொல்லித்தந்தாரா" என்று கேட்டாள். அதற்கு அவள் கணவன், " என் குரு நாதர் அவர் அவர் பாரத்தை அவர் அவர் தான் சுமக்க வேண்டும்" என்றார். அதைக் கேட்டுவிட்டு நான் எப்படி சும்மா இருக்க முடியும்" என்றான்.

கேள்வி : கணவனுக்கு அன்று மதிய உணவு கிடைத்ததா இல்லையா என்று கற்பனை செய்துகொள்ளுங்கள்.

எழுதியவர் : (15-Nov-14, 6:18 pm)
பார்வை : 274

மேலே