ஒரு துளி மழைசில துளி கோபம்-வித்யா

ஒரு துளி மழை.....சில துளி கோபம்......-வித்யா

மலர் அசைத்து தன் வரவை உறுதி செய்து எனைக் கடந்து போனது சில்லெனத்தென்றல். மீண்டும் வந்து மலர் அசைத்தது.....ஓடிப்போய் பிடித்துக் கொண்டேன்..! இறுக மூடிய உள்ளங்கையை சிறு துளை அளவு திறந்து வைத்து பார்த்தேன்....கள்ளி.....ஓடி விட்டாள் ...இன்றும் என் கண்ணில் படாமலே...! மனித உணர்வுகளென்ன அவ்வளவு பெரிய அமானுஷ்யமோ......??தீர்க்கப்படா சமன்பாடுகளோ.......??வாசிக்கப்படா வேதங்களோ......?? முடிந்து போகும்முடிவிலிகளோ...... ஆம்......கிருபைகள் வந்தும் மன சஞ்சலங்கள் அறுபடாமல்....முன்னிலும் இறுக்கமாகிய....மழைக்கொண்ட பாலைப்பிரதேசம்......!!

அம்மாஞ்சிகளுக்கும்...... சமத்துகளுக்கும் கூட இவ்வுணர்வுகள் பேதம் பார்ப்பதில்லை.......
******பன்னீர் மரம் புஷ்பங்களை உதிர்த்து புதுப்பித்துக் கொண்டதைப் போல இருந்தது இன்றைய விடியல்.....நேற்றைய கனவின் விடுதலையில்.....!

==>இந்த மனித இதயங்கள் தான் எவ்வளவு ஆச்சர்யமான இயல்புடையது........!!
==>யாரிடத்திலே நம்முடைய அன்பிற்கு கங்கு கரையில்லையோ அவர்மேலேதான் நமக்கு கோபமும் கரையைக் கடந்து பொங்குகிறது.......!!
==>யாருடைய பெயரைக் கேட்ட மாத்திரத்தில் நம் இதயம் கனிந்து உருகுகிறதோ அவர் எதிரே வரும்போது நமை அறியாமலே தீ சுவாலை ஏந்தி நம் நாக்கு நீளும்.....!!
==>யாருடை தரிசனத்திற்காக உடலின் ஒவ்வொரு செல்லும் துடித்துக்கொண்டிருக்கிறதோ......அவர் வந்த உடனே" ஏன் வந்தாய் ? " எனக் கேட்பது போல நம் மனம் நடந்துகொள்கிறது......!!
==>யாருடைய பிரிவினால் உயிரே கரைந்து கொண்டிருக்கிறதோ....அவரே நமை வெறுக்கும் அளவிற்கு நம் வார்த்தைகள் புள்ளிகள் இணைத்து அலங்கோலமாக்கிவிடுகின்றன......!!



==>இவைக் கூட இயலாமையின் மறுபக்கம்தான்.........
அன்பின் வெளிப்பாடுதான்.......
காதலின் நிலையுணர்த்துதல்தான்.......
கோபத்தின் நியாயம் உணர்த்துதல்தான்.......
உறவுகளின் உரிமை உணர்த்துதல்தான்.........


-நம்மில் எத்தனைப்பேர் புரிந்துக்கொள்கிறோம்........!! பூனைக் காலைச் சுற்றினால் அதற்கு பசிக்கிறது.....என்கிறோம்.....!! மனித இதயங்களைப் புரிந்துகொள்ளத் தவிக்கிறோம்..........!!

எழுதியவர் : வித்யா (15-Nov-14, 2:22 pm)
பார்வை : 242

சிறந்த கட்டுரைகள்

மேலே