எங்க ஊரு திருவிழா - வேலு

கவிதைகள் நிறைந்த தெருக்கள் எங்க
ஊர் திருவிழா கூட்டம்

காவடி ஆட்டம் , மயில் ஆட்டம்
புலியாட்டம் இவைகளுக்கு நடுவே
கொஞ்சமா குடிகாரர்களின் ஆட்டம்

பாட்டு கச்சேரி மேளதாளம்
ஊர் எங்கும் வண்ண கோலம்
கொஞ்சம் இளம் காதலர்கள் வாசம்

தொலை தூர சொந்தங்களின்
பாசம் எங்கள் வீடுகள் எங்கும் வீசும்

தூக்கம் மறக்கும் இரவு வானம் வேடிக்கை
ஆசை பட்ட பொருள் கை அரவணைப்பில்
தங்கையோடு வடைக்கு சண்டை
புது துணி கிழித்ததால் அம்மாவிடம் வாங்கிய அடி
நண்பன் வாங்கி கொடுத்த குச்சி ஐஸ்
தேர் இழுத்து விழுந்த காயம்
கூட்டத்தில் தொலைத்த கண்ணாடி

பழைய நினைவோடு
இந்த ஆண்டு திருவிழா கடக்கிறது அலுகககத்தில் !!!!

எழுதியவர் : வேலு (15-Nov-14, 2:41 pm)
பார்வை : 165

மேலே