கற்பனை
என் கனவில் தோன்றிய கள்வனே .....
உன் ஒரு பார்வையில் என் இதயத்தை
துள்ளி குதித்து நடனமாட செய்தாயே ...!!!
நீ பேசிய முதல் வார்த்தையிலேயே
என்னை மயங்க செய்தாய் ...!!
உன் வாசம் அறிந்து நீ சென்ற பாதையில்
என் கால்கள் காதலோடு நடந்தது ... !!
உன் சுவாசக் காற்றை நான் சுவாசித்து
பரவசத்தின் உச்சக்கட்டத்தை அடைந்தேன் ... !!
உன்னை என் கண்களால் ஓவியம் வரைந்தேன் ..
என் இமைகளுக்குள் உன்னை மறைத்தேன் ...!!
என் விழியில் தெரிவதும் நீதான் ....
என் கனவில் வருவதும் நீதான் ......
காத்திருக்கிறேன் என் வெகுளியான கற்பனையோடு .........
அந்த கள்வன் யார் ?? என்று ...... !!