ஆசைக் காதல்

வானம் திறந்து !
மேகத்தை கிழித்துக் கொண்டு
நாம் இருவரும் மேக படிக்கட்டுக்களில் ஏறி
உன் வீர நடையின் பின்னே
நான் அன்னநடை போட்டுவர
வானத்து தேவதைகள் நம்மை வரவழைக்க
நம் திருமணத்துக்கு
வான் நச்சத்திரங்களை விருந்தினராக வரவழைத்து
கார்த்திகைப் பெண்களை சொந்த உறவினர் முறையில் வரவழைத்து
நம் திருமண அழைப்பிதழை
வெள்ளி நட்ச்சிரமும் ,சுக்கிரனும்
கோள் கோளாக சென்று அழைப்பு விடுக்க
நம் திருமணத்தில் அன்று
நம்மை சுற்றி கார்த்திகை பெண்கள்
நமை கேலி செய்ய
முகில் கூட்டத்தை ஒன்றாக்கி
திருமாங்கல்யத்தை -என்
திருமகன் திமிர் அழகோட முடித்துப் போட
வெட்கத்தில் நான் தலை குனிய
சூரியனை அக்கினியாக வலம் வந்து
உன் கண்ணை நான் பார்க்க
என் கண்ணை நீ பார்க்க
வானத்தில் இடி மேளமாக முழங்க
நீர்த் துளியின் சாரலை ஆசியாகப் பெற்று
மழை பொழிய விண்ணில் இவர்கள் வாழ்த்த
மண்ணில் மழையால் மக்கள் வாழ்த்த
வானவில்லின் நிறங்களில் ஒன்றான
சிவப்பை உன் விரல்களால் தடவி
என் நெற்றியில் குங்குமமாக நீ வைக்க
என் மன்னவன் என்னவனாக
என்னோடு கூட இருக்க
வான் நச்சத்திரங்கள் மொய்ப் பணமாக
வெளிச்சத்தை தந்து செல்ல
கார்த்திகைப் பெண்கள்
தங்கள் கைகளால் வெண் பனியை அள்ளித் தர
நம் புது உறவு புத்துயிர் பெற
உன்கை கோர்த்து செங்கோலில்
தேன் நிலவுக்கு செல்ல
அங்கு நாச விண் வெளியாளர்களை சந்தித்து
இரவில் சூரியனின் பிரகாசத்துடன்
அங்கு நச்சத்திரம் வழிந்தோடும் நீர் ஊற்றின் அருகில்
நாம் அமர
உனைப் பார்த்து நான் சிரிக்க
எனை பார்த்து நீ சிரிக்க
எப்பொழுது இங்கிருந்து
போகப் போகிறோம் என்று நான் உனைக் கேட்க
நீ
இதோ ஐந்து நிமிசத்தில வீட்ட இறக்கி விடுகிறேன்
என்று புன்னைகையுடன் சொல்ல
நாம் கதைத்துக் கொண்டு இருந்த
கடற்கரையில் இருந்து வீட்டுக்கு சென்றோம்
நம் காதலை கண்களிலும்
நம் கனவுகளை மனதிலும்
புதைத்துக் கொண்டு செல்கிறோம் அது நனவாகும் வரை ........