நீர் உறிஞ்சும் மனித அட்டைபூச்சி

எம் மண்ணின்..
தசையை துளைத்து..
நரம்பை அறுத்து..
இரத்தத்தை உறிஞ்சும் கயவனே ..

எம் மண்ணை மலடாக்கி..
மக்களை குருடாக்கி ..
நீரை சுரண்டும்..
விலைமகனே..

இருப்பதை எல்லாம் உறிஞ்சிவிட்டு..
நீ தயாரித்த புளித்த விசத்தை அறுந்த இருக்கிறாயா?
புகைக்காமலே புற்றுநோயும் வந்து இறந்திடுவாய்..
இது சாபமல்ல உன் தயாரிப்பின் விளைபொருள்..

அயல்நாட்டு கயவனுக்காக ..
சற்றும் யோசிக்காமல்..
சொந்த தாய்மண்ணை தாரைவார்க்கின்ராயே..
உனக்கும் காசுக்காக தாயை கொல்பவனுக்கும் என்ன வித்தியாசம்...

மருதநிலத்தில் மாடுகட்டி ஏற்பிடிக்கும்..
எம் விவசாயி அளித்த சோற்றைதானே உண்ணுகிறாய்..
உன் தொண்டை குழியில் சிக்கவில்லையா?
இல்லை உன் சோற்றில் உப்பு இல்லயா?

எழுதியவர் : ப.உதயவன் (16-Nov-14, 11:59 pm)
பார்வை : 223

மேலே