யார் ஊனமுற்றவன்

யார் ஊனமுற்றவன்?

கண்களில் பார்வை இல்லை
விரல்களில் உரசி பார்த்தேன்

பார்வை கிடைத்தது என்
விரல்களுக்கு. விரல்கள் தான்

எனக்கு கண்களாய் தெரிந்தன
விரல்களிலே உரசி படித்து

பட்டம் பெற்றேன் பணியில்
அமரும்போது சொன்னார்கள்.

நான் ஒரு ஊனம்முற்றவன் என்று
என்னால் உணர முடியவில்லை

என் மனம் கேட்கிறது என்னிடம்
நான் ஒரு ஊனம்முற்றவனா? என்று..

கடவுள் கண்களை விரலில் வைத்த
எனக்கு யார் ஊனமுற்றவன்?

எழுதியவர் : (17-Nov-14, 10:48 am)
சேர்த்தது : மன்சூர் அலி
Tanglish : yaar oonamutravan
பார்வை : 57

மேலே