தாயின் அன்பு முத்தம்

யுகம் தொடங்கி உன் முகம் நோக்கும்
இடைவெளியில் உயிர்த்தெழுந்தேன் உன் முதல்முத்தத்தில்.......
யுவன்களுக்கு நடுவே மார்பமுதம் கேட்ட
என்னை வாயமுதம் வைத்து சமரசம் செய்த அழகு முத்தம்.......
சாலையோர கடைகளில் நீர் கேட்ட வேளையில்
என் கன்னத்தில் நீர் இறங்க நீ கொடுத்தாய் அழுத்த முத்தம்.....
விடலை நேர விளைச்சலில் வகுப்பறைவிட
விடமால் கொடுத்த லஞ்ச முத்தம்........
கைரேகை கொண்டு முகரேகை துடைத்த
பதின் பருவத்தில் நீ பகிர்ந்த பாச முத்தம்.....
பலவேலை செய்ய,சிலவேளை மழுப்பி
பளிச்சென முடித்த போலி முத்தம்....
பட்டணம் செல்ல கட்டணம் தந்து
கண்ணீர் தவழ கைகளில் தந்த காதல் முத்தம்......
நித்தம் நித்தம் முத்தம் வாங்கி சொர்க்கம் சென்றேன் ......
என் மேல் சொர்க்கத்திற்க்கு கோபமோ?
என்னை அழைத்து கொண்டது முத்தமிட்டு.
ரத்தம் உறைந்து கட்டை விறகாய் கிடந்த
பெட்டியில் இருந்து உயிர்த்தெழுந்து விட்டேன்
நீ கோடுத்த இறுதி முத்தத்தில்.....
இரண்டாவது முறையாக உயிர் கிடைத்தது .....
தாயின் அன்பு முத்தத்தில்....




- எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்
புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி,
சுங்கான்கடை,

எழுதியவர் : ர.ஆனந்த் (17-Nov-14, 2:03 pm)
Tanglish : thaayin anbu mutham
பார்வை : 145

மேலே