அம்மா

அம்மாவை போல ஓர் அற்புதத் தெய்வம்
எங்கும் இல்லையே
அதை புரிந்து கொள்ளையா
அவளின் சிற்பமாய் உன்னை செய்தாலே
எல்லாம் உண்மையே
உன்னை கண்ணை பார்ப்பளே
கண்மூடி துங்க கண் விழித்து இருந்தால்
என்றும் நம்முடன்
நல் வழியில் செல்லவே
சோறையும் ஊட்டி நிலாவையும் காட்டி
கதையும் சொன்னவள்
நம்மை கலங்காமல் பார்த்தவள்
அழுகும் போது ஆறுதல் கூறி
அணைத்துக் கொண்டவள்
நம்மை அழகுப்படுத்தி பார்ப்பவள்
படிக்கும் போது பக்கத்தில் இருந்து
சொல்லிக் கொடுத்தவள்
நம்மை உயிராய் நினைப்பவள்
அனைத்தும் செய்த அன்னையைக்
கொண்டு சேர்த்தனே
அதையும் ஏற்றுக்கொண்டவள்
இன்று "முதியோர் இல்லத்தில்"

எழுதியவர் : sathishsana (17-Nov-14, 10:14 am)
சேர்த்தது : m.sathishkumar
Tanglish : amma
பார்வை : 164

மேலே