அன்புடன் irungal

என்னை இந்த உலகத்தில் விதைத்த என் ,
அம்மாவிடம் கேட்க துடிக்கிறேன் ஒரு கேள்வி
அன்று....,
நன் அழுவதை பார்த்து மகிழ்ந்தாய்
மாணிக்கமே!
இன்று.....,
நான் படிப்புக்காக பயணம் செயும் வேலையில்,
நீ அழுவதை பார்த்து நான் மகிழ விரும்புகிறேன்
காரணம்...
இனி உன்னை அழவைக்க,
இறைவனே வந்தாலும் இளித்து உரைப்பேன்
என்னை உயரத்தில் உட்கார வைக்க
அன்று நீ பட்ட வேதனைகள் அப்பப்பா!
அதை கேட்டால் எறியும் நெருப்பும் அணைந்திடும்
என் அன்னையே!
அத்தனையும் உன் வியர்வை துளிகளால்,
மருத்துவர்களால் கண்டறியா
உன் நோயை சுமந்து கொண்டு
இன்னும் உன் மகளை உயர்த்த போராடுகிறாய்!
உழைக்கும் உன் சம்பளத்தில்
பாதி உன் உடலுக்கும்
மீதியை உன் உயிரான எனக்கும்
செலவளித்தே!
சுகம் இழந்தாய்!
இனி
சுகம் உன்னை இளக்க விடமாட்டேன்
என் வாழ்வின் வரமே!
கண்ணீர் உன்னை விட்டு காணமல் செய்திடுவேன்!


கவியரசி M
9344961891
sri paramakalyani college,
Alwarkurichi -627 412
Tirunelveli Dist .

எழுதியவர் : கவியரசி M (16-Nov-14, 6:42 pm)
பார்வை : 105

மேலே