கனவுகள் மெய்பட வேண்டும் - போட்டிக் கவிதை - தேன்மொழி

கனவுகள் மெய்பட வேண்டும் - போட்டிக் கவிதை - தேன்மொழி
---------------------------------------------------------------------------------------------
இயற்கை மடியில் தவிழ்ந்து
மழலை இதழாய் சிரிக்கணும் ..!
உயிரோடு பேசும் மொழிகளில்
வாய்மை ஒன்றே வாழணும் ..!
தேடலின் வேட்கையில் விழித்து
இலக்கை வானமாய் உயர்த்தணும் ..!
கலைகளை கரத்தில் காத்து
உணர்வாய் நரம்பில் நகர்த்தணும் ..!
அன்பை இதயமாய் ரசித்து
வாழ்வை வானவில்லாய் வரையணும் ..!
தியாகம் தினசரி கடமையாக
கருணை கடலாய் மிதக்கணும் ..!
வன்முறை சேர்க்கும் பலத்தை
செருப்பால் அடித்து திருத்தணும் ..!
நாட்டின் நிலையை உயர்த்தி
வல்லரசின் தலைப்பாய் நிறுத்தணும் ..!
புதுமை நினைக்கும் இளமை
செழுமை குணமாய் மிளிரணும் ..!
கவலை உடைக்கும் நம்பிக்கை
வெற்றி விதையாய் முளைக்கணும் ..!
சுதந்திர அர்த்தம் அறிந்து
வறுமை தடுக்க உதவணும் ..!
எவனோ சொல்லும் சாதியை
சரித்து சிதைத்து அழிக்கணும் ..!
சரித்திரம் படைக்கும் துடிப்பினை
கவிதை வரியாய் எழுதணும் ..!
நெருப்பாய் விழிக்கும் விழிகளில்
மனிதம் அனலாய் ஒளிரணும் ..!
--- தேன்மொழி . B.E.
இளநிலை கட்டிடப் பொறியியல்
சூர்யா பொறியியல் கல்லூரி
ஈரோடு