மொட்டைமாடி இரவு உறக்கம்
கருநீல மேகத்தில்
வண்ணம் தீட்டாத அறைநிலா..
என் தோட்டத்து பூக்கள்
இருப்பினும் எண்ணமுடியவில்லை
என்னெதிரே நட்சத்திரங்களாய்..
எங்கோ ஒரு மூலையில்
ஒலிக்கிறது.. வாகனத்தின்
வழிவிடு என்கின்ற சத்தம்..!
காதுக்கு எட்டிய
வானொலிபெட்டியின்
ஐம்பதாண்டை கடந்த
அமுத கானமும்..
மூன்றடி தள்ளிய
படுக்கையில் அப்பாவின் குறட்டையும்..
அதை அறிந்து சிரிக்கும்
தம்பி தங்கையின்
குறும்பு சத்தமும்..
என் அம்மாவின் பாட்டிகதையும்..
என்னை தூங்கசொல்லி
தூண்டில்போடும் தென்றலும்..
சுகம்... சுகம்தான்.....
என் மொட்டைமாடி இரவுஉறக்கம்...!

