தூது போ
![](https://eluthu.com/images/loading.gif)
புறாவே போ ! என்
காதலனிடம் தூது போ !
நான் அவன் வருகைக்காய்
காத்திருக்கிறேன் எனச் சொல்
நிலவே போ ! என்
காதலனிடம் தூது போ !
என் கனவுகளில் அவன் தான்
எனச் சொல்
அன்னமே போ ! என்
காதலனிடம் தூது போ !
என் கண்களில் கண்ணீர்
சிந்துவது அவனுக்காக எனச் சொல்
நதியே போ ! என்
காதலனிடம் தூது போ !
என் மூச்சும் பேச்சும்
அவனுக்காக எனச் சொல்
தென்றலே போ ! என்
காதலனிடம் தூது போ !
என் நடையும் உடையும்
அவனுக்காக எனச் சொல்