நீதானே
![](https://eluthu.com/images/loading.gif)
பள்ளி பருவம் முதலே
பேதையின் நட்பு இன்றி வாழ்ந்தவன் நான்
ஆனால் பெண்மையை போற்ற தெரிந்தவன்
தாயின் ரூபத்தில்!!..
கல்லூரி தொடங்கிய முதல் நாள் அன்றே
என் கண்ணில் பட்ட முதல் பெண் நீதானே !!..
நட்பு எனும் வட்டத்தில் ஆடவர் இன்றி
வந்த முதல் பெண் தோழி நீதானே !!..
கதிரவனின் ஒளி புவியை படர்வது போல்
எனை அறியாமலே
என் இதயத்தில் படர்ந்தவள் நீதானே !!..
உன் மேல் உள்ளது நட்பா ? காதலா ?
என்று என் மனம் புலம்பிய போது!!..
நம் கல்லூரி நிறைவுறும் நாளில்
தனிமையில் என் மார் மீது முகம் பதித்து
உன் கண்ணீரால் என் காதலை
எனக்கே உணர்த்தியவள் நீதானே !!.
உன்னுடன் இருந்த மூன்றாண்டு காலம்
நொடிகளாய் கரைந்து போனாலும்
உன்னுடன் செலவிட்ட சிறு நொடிகளை கூட
நினைத்து வாழ்ந்து வருகிறேன் வருடங்கள் கடந்தோடியும் !!..
நீ என்னிடம் வருவாய் என்றொரு நம்பிக்கையில்
காரணம் ?
நம்பிக்கை வீண்போகாது என்று உணர்தியவளும் "நீதானே" !!....