முத்தப் போராட்டம்
உச்சம் பெற்ற ஆழ்மனதின் அன்பை
இச்சையுடன் உணர்த்துவது முத்தம் - இங்கு
கொச்சை பட வீதியில் நின்று
எச்சில் இட்டுக்கொள்வது முத்தமோ..?
முச்சந்தியில் புணருகின்ற நாய்களைப் போல்
முத்தமழை பொழிகின்றீர் வெட்கமின்றி வீதியிலே
குற்றமென்ன இதில் என்று கூசாமல் வாதிடுகின்றீர்
சட்டம் இருந்தால் சொல் என்று சவால் விடுகின்றீர்
நட்டப் படும் இந்த நாகரீக சீரழிவிற்கு
சட்டம் போட்டுத் தடுத்தாலும்
திட்டம் போட்டுத் தீர்வு கண்டாலும்
எட்டப் போவதில்லை உணர்வற்ற ஈனர்களுக்கு
சவக் கிடங்கில் நாரிக் கிடக்கும்
பிணமானது இன்று பண்பாடு - இனி
மணக்க வேண்டுமென நினைப்போர்
பிணக்கம் கொண்ட சமூக விரோதிகள் !
கவிதாயினி அமுதா பொற்கொடி