மீண்டும் பூத்த ரோஜா

வருவதற்கு தான் சென்றாயா.... ?

வருவதை சொல்லி இருந்தால் ..
கண்ணீரை துடைத்திருப்பேனே ..

ஆனால் உன் அன்பின் உஷ்ணத்தில்
நான் சிந்திய கண்ணீர் காய்ந்தது ...

சண்டை நாட்கள்
சிரிப்பு ஞாபகங்கள் ஆகின்றன ...

உன்னை தொலைத்த நான்
இத்தனை நாட்கள் என் வாழ்வில் தேடி அலைந்த அந்த முழுமை
நீயே தானா ??

கண் பார்த்து வந்த காதலாக இருந்தால்
கண்ணீரோடு கறைந்திருக்கும்
இதயத்தில் இருந்து பூத்த காதல்
உயிர் போகும் வரை காத்திருக்கும் ...

பிரிவிலும் காதலித்த நம்மை
முட்டாள்கள் என்பதா ??
காதலர்கள் என்பதா ??

குழந்தை பருவம் மீண்டும் கிடைத்த முதியவனாகிறேன்
உன் வருகையால் ...

வா
நம் உதடுகள் கொட்டித் தீர்த்த
எத்தனையோ சண்டை வார்த்தைகளை
பார்வைகளால் சமாதான படுத்துவோம் ...

என் கண்ணில் இருந்து உதட்டில் விழுந்த கண்ணீருக்கு
ஏன் அத்தனை ஆச்சரியம் ??
நான் சிரித்து கொண்டே அழுவதை பார்த்ததாலா ??

எழுதியவர் : dharma .R (19-Nov-14, 12:48 pm)
பார்வை : 110

மேலே